×

எறையூர் சர்க்கரை ஆலையில் தீயணைப்பு செயல்முறை விளக்கம்

பெரம்பலூர்: எறையூர் சர்க்கரை ஆலையில் தீயணைப்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், வே ப்பந்தட்டை தாலுக்கா எறை யூரில் உள்ள பெரம்பலூர் நேரு பொதுத்துறை சர்க்க ரை ஆலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வேப்பூர் தீயணைப்பு நிலையம் இணைந்து, தீத்தொண்டு வா ரத்தை முன்னிட்டு, தீ பாது காப்பைஅறிவோம், உற்பத் தியை அதிகரிப்போம் என் றத் தலைப்பின் கீழ் தீய ணைப்பு செயல்விளக்கம் நேற்று நடைபெற்றது. வேப் பூர் தீயணைப்புத் துறையி ன் நிலைய அலுவலர் (கூடு தல்பொறுப்பு) ராஜா தலை மையில் தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு ஆலையி ல் ஏற்படும் விபத்து மற்றும் தீவிபத்துகளில் சிக்கியத் தொழிலாளர்களை எவ்வாறு காப்பாற்றுவது, தீயை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது, தீக்காயம் அடை ந்தவருக்கு, விபத்தில் பாதி க்கப்பட்டவருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சையினை அளிப்பது, தீவிபத்து ஏற்ப டாதிருக்கு என்னென்ன மு ன்னெரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வது என் பது குறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் செயல்மு றை விளக்கத்துடன் செய்து காட்டி விழிப்புணர்வு செய்து காட்டினர்.நிகழ்ச்சியில் சர்க்கரை ஆ லையின் தலைமை நிர்வா கி ரமேஷ் ஏற்பாட்டில் கரும்பு அலுவலர்கள்,ரசாயணர், பொறியாளர்கள், கணக்கு அலுவலர், தொழிலாளர் ந ல அலுவலர் ராஜா, மற்றும் பொறியியல், ரசாயணப்பி ரிவு, கரும்பு அபிவிருத்தி அ லுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலக ப ணியாளர்கள் கலந்து கொ ண்டனர்….

The post எறையூர் சர்க்கரை ஆலையில் தீயணைப்பு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ereyur Sugar Mill ,Erayur Sugar Factory ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...