×

பிலிப்பைன்ஸ், சீனாவில் மருத்துவம் படித்தோருக்கு தமிழகத்தில் பயிற்சி: உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்

பண்ருட்டி வேல்முருகன் (தவாக): தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்தனர். கடைசி 6 மாதம் படிப்பு இருந்த நிலையில், கொரோனாவால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர், இங்கிருந்தே ஆன்லைன் மூலம் 6 மாத படிப்பையும் முடித்தனர். தற்போது எய்ம்ஸ் நடத்திய தேர்விலும் வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால், ஓராண்டு இன்டென்ஷிப் பயிற்சி மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் மருத்துவம் படித்து திரும்பியவர்களுக்கும் இதேநிலை. எனவே, அந்த மாணவர்களுக்கு இன்டென்ஷிப் பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும்.அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்த மாணவர்கள் இங்கு ‘இன்டென்ஷிப்’ பயிற்சி பெற முடியவில்லை என்பது உண்மை. அதற்காக, நுழைவுத் தேர்வு எழுதி பதிவு செய்து கொண்டு, பயிற்சி பெற வேண்டும். ஆனால், இதற்கான ஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. தற்போது, 384 மாணவர்களுக்குத்தான் இன்டென்ஷிப் பயிற்சி வழங்க முடியும். அதை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் 1010 மாணவர்கள் இன்டென்ஷிப் பயிற்சி பெற முடியும். முதல்வரின் கோரிக்கைப்படி நிச்சயம் அது நடைபெறும்….

The post பிலிப்பைன்ஸ், சீனாவில் மருத்துவம் படித்தோருக்கு தமிழகத்தில் பயிற்சி: உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Philippines, China ,Panruti Velmurugan ,Dawaka ,Philippines ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...