×

வெளிநாட்டு பல்கலை.களுடன் கூட்டு பட்டப்படிப்பு: யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி: உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் கூட்டம் பல்கலை மானிய குழு தலைவர் ஜகதீஷ் குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. அதன் பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தேசிய தரவரிசை நிறுவன கட்டமைப்பின் பல்கலைக் கழக வகைப்படுத்துதல் பட்டியலில் முதல் 100 இடங்கள் அல்லது குறைந்தபட்சமாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவின் 3.01 மதிப்பெண் எடுத்து அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு இந்திய கல்வி நிறுவனம் அல்லது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் பட்டியலில் முதல் 500 இடங்களில் உள்ள அல்லது க்யூஎஸ் உலக பல்கலைக் கழக தரவரிசையில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் பல்கலை மானிய குழுவின் முன் அனுமதி பெறாமலேயே இணைந்து கூட்டு பட்டப்படிப்பை வழங்கலாம்.இந்த இரட்டை திட்டத்தின் கீழ், மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சமாக 30 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். அதே நேரம், இந்த விதிமுறைகள் ஆன்லைன், தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலை கழகங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்….

The post வெளிநாட்டு பல்கலை.களுடன் கூட்டு பட்டப்படிப்பு: யுஜிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UGC ,New Delhi ,Higher ,Education Regulatory Commission ,University Grants Committee ,Jagdish Kumar ,Delhi ,Dinakaran ,
× RELATED தேசிய தேர்வு முகமை குறித்து...