×

பிரியங்கா கூட்டத்துக்கு 144 தடை உத்தரவு : உத்தரபிரதேச அரசு திடீர் நடவடிக்கை

லக்னோ:மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரபிரதேச மாநிலம் சஹாரான்பூரில் உள்ள சில்கானா கிராமத்தில் இன்று ‘மகாபஞ்சாயத்து’ நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் பங்கேற்பதாக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சஹாரன்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சட்டப் பிரிவு 144-இன் கீழ் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சில்கானா கிராமத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ இம்ரான் மசூத் கூறுகையில், ‘காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விவசாய அமைப்புகளின் சார்பில் நடைபெறும் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கான கூட்ட மேடையும் தயாராக உள்ளது. இக்கூட்டத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் திடீரென 144 தடை உத்தரவு போட்டுள்ளது’ என்றார். மாவட்ட நிர்வாகம் இன்று காலை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …

The post பிரியங்கா கூட்டத்துக்கு 144 தடை உத்தரவு : உத்தரபிரதேச அரசு திடீர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Uttar Pradesh Government ,Lucknow ,Silkana ,Uttar Pradesh ,Saharanpur ,Central Government ,Priyanka Meeting ,Dinakaran ,
× RELATED ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் கடன்...