சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்கக்கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு 2018ல் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை. இதுகுறித்து அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தற்போதைய விலைவாசியில் 1,000 ரூபாய், 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு பதில், அவற்றை நிறுத்தி விடலாம். இந்த சொற்ப தொகையை கொடுத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தக் கூடாது. அந்த தொகை எவ்வாறு போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியதுடன் விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….
The post பார்வையற்றவர்களுக்கான உதவித்தொகை சொற்பம்: ஐகோர்ட் அதிருப்தி appeared first on Dinakaran.
