×

சம்பங்கி விளைச்சல் அதிகரிப்பு: மூட்டை மூட்டையாக பூக்களை குளத்தில் கொட்டிய விவசாயிகள்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், ராமபைலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் சம்பங்கி பூக்கள் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சம்பங்கி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பூக்களின் தேவை குறைந்துள்ளதால் நேற்று டன் கணக்கில் பறித்து வைக்கப்பட்டிருந்த சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பறித்த பூக்களை விவசாயிகள் மினி லாரியில் ஏற்றிச் சென்று சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியில் வறண்ட குளத்தில் சாக்கு மூட்டைகளில் இருந்த பூக்களை கீழே கொட்டினர்.சம்பங்கி பூக்களை பறிக்கும் கூலி கொடுப்பதற்கு கூட வருமானம் கிடைக்காததால் சம்பங்கி பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சம்பங்கி விளைச்சல் அதிகரிப்பு: மூட்டை மூட்டையாக பூக்களை குளத்தில் கொட்டிய விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Sambangi ,Sathyamangalam ,Sikkarasampalayam ,Periyakulam ,Pulyangombai ,Ariyapampalayam ,Ramabailur ,Erode district ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...