×

போராட்டம் நடத்துவோரின் உரிமையை பறிக்க இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தம்? புதிய அமைச்சரவையின் மூலம் ராஜபக்சே திட்டம்

கொழும்பு; போராட்டம் நடத்துவோரின் உரிமையை பறிக்கும் வகையில் இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர, பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதா மற்றும் அரசியல் நெருக்கடியால், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதையடுத்து அனைத்து கேபினட் அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை.இந்தநிலையில் நேற்று புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு 17 பேர் அமைச்சர்களாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன் பதவியேற்றனர். ஆனால் அமைச்சரவையில், ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர் எவரும் இல்லை. அதே கடந்த அமைச்சரவையின் போது ஜனாதிபதி, பிரதமர் உட்பட 7 பேர் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருந்தனர். இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவையில், சட்டம், நிர்வாகம் மற்றும் நீதித்துறையில் தங்களுக்கு சாதகமான காரணிகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என்று பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் தமது ஆட்சிக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை நசுக்கவே பிரதமர் இந்த திருத்தத்தை கொண்டு வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எப்படியாகிலும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதனை நிறைவேற்று அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மத்தியில் எழுந்துள்ளது….

The post போராட்டம் நடத்துவோரின் உரிமையை பறிக்க இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தம்? புதிய அமைச்சரவையின் மூலம் ராஜபக்சே திட்டம் appeared first on Dinakaran.

Tags : Rajapaksa ,Colombo ,Mahinda Rajapaksa ,Rajapakse ,Dinakaran ,
× RELATED இலங்கையில் செப். 17 முதல் அக்.16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல்