×

பஸ் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது வங்கியில் புகுந்த கன்டெய்னர் லாரி: டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்

சென்னை: கோயம்பேட்டில் இருந்து நேற்று காலை செங்கல்பட்டு நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, கீரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு (தடம் எண் 55 கே) அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து கூடுவாஞ்சேரி செல்வதற்காக காரணைப் புதுச்சேரி கூட்ரோட்டில் திரும்பியது. இதை பார்த்த கன்டெய்னர் லாரி டிரைவர், பேருந்து மீது மோதாமல் இருக்க  உடனே லாரியை திருப்பினார்.  இதனால், தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சாலையோரத்தில் இருந்த வங்கியில் புகுந்தது. இதில், முன் பக்கத்தில் இருந்த ஏடிஎம் சேதமடைந்தது. லாரி டிரைவர் சந்திரசேகர் (40), கிளீனர் ரஞ்சித் (30) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் லாரியில் சிக்கி தவித்தனர். அப்பகுதி மக்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மற்றும் கிளீனரை மீட்டனர். தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படும்போது எதிர் திசையில் எந்த வாகனமும் வராததாலும், ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது….

The post பஸ் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது வங்கியில் புகுந்த கன்டெய்னர் லாரி: டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chengalpattu ,Coimbatore ,Urpakkam GST ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை