×

வடமாநில இளைஞர்களிடம் பணப்பறிப்பு: போலி போலீசார் 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பூர் ஊராட்சியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இத் தொழிற்சாலைகளில் வட மாநில இளைஞர்கள் வைப்பூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். வடமாநில இளைஞர்களை குறிவைத்து இளைஞர்கள் சிலர் அவர்களை தாக்கி, பணம், செல்போன், செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்களிடம் போலீசார் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்வதில்லை.  வைப்பூர் ஊராட்சியில் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த லுட்பூர் ரகுமான் (22) என்பவர், வைப்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராயல் என்பீல்டு பைக்கில் காக்கி பேண்ட் அணிந்து டிப்டாப்பாக வலம் வந்த இருவர், ரகுமானை மடக்கி நாங்கள்  போலீஸ் என கூறியுள்ளனர். மேலும் நீ என்ன கஞ்சா வைத்திருக்கிறாயா? எனக் கேட்டு சோதனை செய்துள்ளனர்.பின்னர் ரகுமானிடம்  பணம் கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். அடி தாங்காமல் லுட்பூர் ரகுமான் தன் வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ .5 ஆயிரத்தை கூகுள்பே மூலம் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.பின்னர் இதுகுறித்து நண்பர்களிடம் கூறி  கூகுள்பே மூலம் அனுப்பிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த மர்ம ஆசாமிகள் இருவரையும் வைப்பூர் கிராமத்திற்கு வரவழைத்துள்ளனர். வந்த இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்படவே ஒரகடம் போலீசுக்கு தகவல் அளித்தனர்.  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் இருவரும் போலி போலீஸ் என தெரியவந்தது. புகாரின் பேரில் போலி போலீசாக வழிப்பறியில் ஈடுபட்ட காரணிதாங்கல்  சதீஷ்குமார் (34), வஞ்சுவாஞ்சேரி சரவணன் (30). ஆகிய இருவரையும் ஒரகடம் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் போலீஸ் என கூறி பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது….

The post வடமாநில இளைஞர்களிடம் பணப்பறிப்பு: போலி போலீசார் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Sriperumbudur ,Vaipur panchayat ,Oragadam ,
× RELATED வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில...