×

தீப்பந்தம் வீசி யானை கொலை விவகாரம்: குன்னூர் அருகே ரிசார்ட்டிற்கு சீல்

குன்னூர்: தீப்பந்தம் வீசி காட்டு யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் குன்னூர் அருகே ரிசார்ட்டிற்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை மாவநல்லா பகுதியில் தனியார் ரிசார்ட் நடத்தி வந்தவர்கள் யானைக்கு தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மசினகுடி பகுதியில் சில ரிசார்ட்களுக்கு சீல் வைக்கப்பட்டன.குன்னூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள குரும்பாடி பழங்குடியின கிராமம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர்‌.யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த குரும்பாடி கிராமம் அருகே வனப் பகுதிக்குள் உள்ள தனியார் ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட் ஹட்கா கமிட்டியிடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது.இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அந்த ரிசார்ட்டிற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, பர்லியார் ஊராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று டிசார்ட்டிற்கு சீல் வைத்தனர்….

The post தீப்பந்தம் வீசி யானை கொலை விவகாரம்: குன்னூர் அருகே ரிசார்ட்டிற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில்...