×

தள்ளுவண்டி உணவகம் நடத்தும் திமுக பெண் கவுன்சிலர்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..திமுகவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வரும் திமுக-வை சேர்ந்த பெண் கவுன்சிலர் புஷ்பாவதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியின் 8வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பாவதி. இவர் அதே பகுதியில் தனது கணவருடன் இணைந்து பல ஆண்டுகளாக தள்ளுவண்டியில் வைத்து உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார். கவுன்சிலராக வெற்றிபெற்ற பிறகும் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தும் தொழிலை கைவிடாத அவர், தனது வார்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். தினந்தோறும் காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கான தேவையை நிறைவேற்றும் புஷ்பாவதி, மாலையில் தள்ளுவண்டி உணவகத்தின் மூலம் சுவையான உணவுகளை விற்பனை செய்து அசத்தி வருகிறார். சமூக சேவையின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாகவே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டதாக கூறும் அவர், தனக்கு மக்கள் சேவை ஒரு கண் என்றால் மற்றொரு கண் தள்ளுவண்டி கடை தொழில் என நெகிழ வைக்கிறார். மக்கள் சேவை, தள்ளுவண்டி கடை என அசத்தும் புஷ்பாவதி, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்தும் தன் வார்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பே சேலம் அரசு மருத்துவமனையில் தானும், கணவரும் உடல்தானம் செய்வதாக எழுதி கொடுத்ததாகவும் மெய்சிலிர்க்க வைக்கிறார். புஷ்பாவதி தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக-விற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். …

The post தள்ளுவண்டி உணவகம் நடத்தும் திமுக பெண் கவுன்சிலர்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..திமுகவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Trolley Restaurant ,Concillor ,G.K. Stalin ,Salem ,Chief Minister ,B.C. ,CM ,Dhagu ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...