×

டோலிவுட் போனார் இந்துஜா

ஐதராபாத்: இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படம் மூலம் இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகம் ஆகிறார். கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை இயக்கினார். தொடர்ந்து டைரக்‌ஷனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’, ‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில் உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார். இவர் தமிழில் மேயாத மான், மகாமுனி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post டோலிவுட் போனார் இந்துஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Induja ,Tollywood ,Hyderabad ,Selvaraghavan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...