×

வாழப்பாடியில் பெய்த ஆலங்கட்டிமழை: வாழைமரங்கள், பாக்கு மரங்கள் முறிந்தன; விவசாயிகள் கவலை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அலங்கட்டியுடன் பெய்த கனமழையால் பல லட்சம் மதிப்பிலான பாக்கு மற்றும் வாழை  மரங்கள் சேதமடைந்து இருக்கின்றன. வாழப்பாடி பெத்த நாயக்கம்பாலை மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று மலை 4 மணி முதல் 7 மணி வரை சுமார் 2 மணி நேரம் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.வாழப்பாடி சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழையால் சில இடங்களில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் செக்கடிபட்டி, மெட்டுக்கல், பனைமடல் உள்ளிட்ட இடங்களில்  பயிரிடப்பட்ட  ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன ஏராளமான பாக்கு மரங்களும் முறிந்து வேரோடு சாய்ந்தன இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர், இழப்பை  எப்படி  ஈடுகட்டுவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேதமடைந்த பயிர்களை அரசு துறை அதிகாரிகள்  நேரில்  சென்று பார்வையிட்டனர் அவர்களிடம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியறுத்தினார்கள்….

The post வாழப்பாடியில் பெய்த ஆலங்கட்டிமழை: வாழைமரங்கள், பாக்கு மரங்கள் முறிந்தன; விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை