×

சித்திரை திருவிழா முன்னிட்டு ஒயிலாட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது

குன்னூர்:  குன்னூரில் சித்திரை திருவிழா முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒயிலாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சித்திரை மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் தற்போது சொந்த பந்தங்கள் இணைந்து தங்களது கிராமங்களில் உள்ள ஆலயங்களில் திருவிழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் மகா காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கு பெற்ற ஒயிலாட்ட நடனம் நேற்று நடைபெற்றது. பாரம்பரியம் அழியாமல் கையில் சலங்கை வைத்து வீசி  பாடல் பாடி  அரங்கேற்றிய ஒயிலாட்டம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது….

The post சித்திரை திருவிழா முன்னிட்டு ஒயிலாட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Oilatham ,Kunanur ,Kunnor ,Neelagiri ,Wailatam ,Chitra Festival ,Dinakaraan ,
× RELATED உரிய ஊதியம் வழங்க கோரி அரசு...