×

தமிழ்நாடு யாதவ சபை தலைவராக நாசே.ராமச்சந்திரன் ஒருமனதாக தேர்வு: மாநில நிர்வாக குழு கூட்டம்

சென்னை: சென்னையில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில நிர்வாக குழு கூட்டம் நிர்வாகி சுப்பரமணியன்  தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் செல்வராஜ்  முன்னிலை வகித்தார். பொருளாளர் எத்திராஜ் வரவேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவராக நாசே.ஜெ.ராமச்சந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் கூறியதாவது: யாதவ மகாசபை சார்பாக சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி உடனடியாக விரைவில் துவக்கப்படும்.  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நமது  சொந்தங்களை சந்தித்து அனைவரையும் ஒருங்கிணைத்து நமது சமுதாயத்தின் பலத்தினை உணர்த்திட பாடுபடுவேன். விரைவில் அகில இந்திய யாதவ சமுதாயத்தின் பெருந்தலைவர்களையும், தமிழ்நாடு முதல்வரையும், அமைச்சர்களையும் மற்றும் அனைத்து சமுதாய சான்றோர்களையும் அழைத்து சுமார் ஐந்து லட்சம் யாதவ மக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறேன்.ஒன்றிய, மாநில அரசுகள் தாமதமின்றி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு யாதவ மகா சபையின் நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை வாரியம் அமைத்து, அதில் யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post தமிழ்நாடு யாதவ சபை தலைவராக நாசே.ராமச்சந்திரன் ஒருமனதாக தேர்வு: மாநில நிர்வாக குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Yadava Sabha ,President ,Nase Ramachandran ,State Executive Committee ,Chennai ,Tamil ,Nadu Yadava ,Mahasabha ,executive ,committee ,Subparamanian ,General Secretary ,Selvaraj ,State Executive Committee Meeting ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் மரணம்.. மோசமான வானிலையே...