×

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. “தளபதி68” என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக “தளபதி68” இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், நடன சூறாவளி பிரபுதேவா, வெள்ளி விழா நாயகன் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறனர்.

இவர்களுடன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும். கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பு: எஸ். எம். வெங்கட் மாணிக்கம். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள “தளபதி68” 2024-ம் ஆண்டு வெளியாகும்.

The post விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : VIJAY ,VENKAT PRABU ,AGS ,Kalpathi S. ,Yuvan Shankar Raja ,Venkat Prabhu ,Agoram ,AGS Entertainment ,Akoram ,Kalpathi S. Ganesh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்