×

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.2 லட்சம் இழந்ததால் விரக்தி ஓட்டல் ஊழியர் தற்கொலை: மேற்கு மாம்பலத்தில் சோகம்

சென்னை: மேற்கு மாம்பலம், நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜன் (25). வேளச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். தொடக்கத்தில், இந்த ரம்மி விளையாட்டு மூலம் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதில் அதிக வருமானம் வந்ததால் காந்தி ராஜன் தொடர்ந்து நீண்ட நேரம் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். சில நாட்களில், அடுத்தடுத்து தனது பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டும், என்ற எண்ணத்தில் மீண்டும் தொடர்ந்து விளையாடி உள்ளார். அதன் மூலம் ரூ.2 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு, அதையும் இழந்துள்ளார். கடன் கொடுத்த நபர்களும் திரும்ப கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மாலையில், அவரது பெற்றோர் வெளியே சென்று இருந்த நிலையில், இரவு 10 மணிக்கு வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வந்த நபர், பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்து, தண்ணீர் கேன் போடவந்த நபர், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, காந்தி ராஜன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனே இதுபற்றி குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, காந்திராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, காந்தி ராஜன் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் விளையாட்டுக்காக அதிகளவில் கடன் வாங்கியதும், அதை திருப்பி தர முடியாததால் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரிக்கின்றனர். …

The post ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.2 லட்சம் இழந்ததால் விரக்தி ஓட்டல் ஊழியர் தற்கொலை: மேற்கு மாம்பலத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : West Mambalam ,Chennai ,Gandhi Rajan ,Nagathamman Temple Street, West Mambalam ,Velacheri ,West ,
× RELATED காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!