×

ராஷ்மிகா நடிக்கும் தி கேர்ள் ஃபிரண்ட்

ஐதராபாத்: கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ், தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் படத்துக்கு ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தைப் பற்றிய ஸ்னீக்பீக்கை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இப்படத்தின் கதை அனைத்து வயதினரும் கொண்டாடக்க்டிய திரை அனுபவமாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ளனர்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். அல்லு அரவிந்த் வழங்கும் படத்தை வித்யா கோப்பினீடி, தீரஜ் மொகிலினேனி இணைந்து தயாரிக்கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணா, மோனிகா நிகோத்ரே தயாரிப்பு வடிவமைப்பு பொறுப்பை ஏற்றுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ராகுல் ரவீந்திரன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

The post ராஷ்மிகா நடிக்கும் தி கேர்ள் ஃபிரண்ட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rashmika ,Hyderabad ,Rahul Ravindran ,Geetha ,Arts ,Mass Movie Makers ,Dheeraj ,Mogilineni ,Entertainment ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு:...