×

மிஷ்கின் படத்துக்காக கெட்டப் மாறிய விஜய் சேதுபதி

சென்னை: தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி, இந்தியிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடிக்கும் அவர், தற்போது இந்தியில் கேத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடித்த ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படம், வரும் டிசம்பர் 8ம் தேதியன்று திரைக்கு வருகிறது. ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தைத் தொடர்ந்து பி.ஆறுமுககுமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேசியா சென்று வந்திருக்கும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்றிருந்த `விடுதலை 1’ படத்தை தொடர்ந்து, `விடுதலை 2’ படத்தில் சூரி, மஞ்சு வாரியர் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்தியில் அவர் நடிக்கும் `காந்தி டாக்ஸ்’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தில் வசனங்கள் கிடையாது. முழுநீள மவுனப் படமாக உருவாகி வருகிறது. தவிர, மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா நடிக்கும் `பிசாசு 2’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, தனது நடிப்பில் உருவான 50வது படமான `மகாராஜா’ படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதை `குரங்கு பொம்மை’ நித்திலன் எழுதி இயக்கியுள்ளார். தவிர, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் 10 பாகங்கள் கொண்ட வெப்தொடர் ஒன்றில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறார். ஒரே ஷெட்யூலில் நடந்து முடியும் இப்படத்தில் ஏற்றுள்ள கேரக்டருக்காக தனது உடல் எடையைக் குறைத்துள்ள அவர், மீசை மற்றும் தோற்றத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

The post மிஷ்கின் படத்துக்காக கெட்டப் மாறிய விஜய் சேதுபதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Mishkin ,Chennai ,Katrina ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்