×

இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு புறக்கணிக்கிறது என ஆளுநரின் சந்திப்புக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சந்தித்தனர். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தினர். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என கூறினார். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் வருத்தத்தை அளிக்கிறது என கூறினார். சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை அலட்சியப்படுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். முதல்வரிடம் உறுதியளித்த பிறகும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என கூறினார். நீட் விலக்கு உள்ளிட்ட 11 மசோதாக்கள், கடிதங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக கூறினார். நிலுவையில் உள்ள மசோதாக்கள்: * பாரதியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2021 செப். 20 முதல் நிலுவையில் உள்ளது. * டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொதுத் தமிழை சேர்க்க வகைசெய்யும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்டத்திருத்த மசோதா நிலுவையில் உள்ளது. * மாநில சட்ட ஆணைய பரிந்துரை சில சட்டங்கள் ரத்துசெய்ய வகைசெய்யும் மசோதா நிலுவையில் உள்ளது * தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. * மீன்வள பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதா * தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதா ஆகிய இன்னும் சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என கூறினார்….

The post இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Bharatiyar ,Governor ,House ,Minister ,Thangam ,Southern ,Chennai ,Tamil Nadu government ,Bharathiar ,Governor's ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...