×

அயோத்தியா மண்டபத்தை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்த பாஜவினர் கைது: கரு.நாகராஜன் உட்பட 75 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் உள்ளிட்ட 75 பேர் அயோத்தியா மண்டபம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை தடுத்து முற்றுகையிட முயன்றனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து ற கரு.நாகராஜன், உமா ஆனந்த் உட்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி  கரு.நாகராஜன், கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது. சட்ட விரோதமாக கூடியது ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….

The post அயோத்தியா மண்டபத்தை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்த பாஜவினர் கைது: கரு.நாகராஜன் உட்பட 75 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Ayodhya ,Karu.Nagarajan. ,CHENNAI ,Ayodhya Mandapam ,West Mambalam, Chennai ,Tamil Nadu ,Ayodhya hall ,Karu.Nagarajan ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி