×

தென்ஆப்பிரிக்கா பறந்தது விஜய் படக்குழு

 

சென்னை: ‘லியோ’ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்துத் வருகிறார் விஜய். இந்த படத்தில் 50 வயது, 25 வயது என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடித்தார்கள். அதையடுத்து தற்போது ஒரு சண்டைக்காட்சியை படமாக்குவதற்காக விஜய் 68வது படக்குழு தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

அங்கு விஜய்யுடன் வில்லன்கள் மோதும் ஒரு அதிரடியான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் விஜய்யின் ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் டைட்டிலை வெளியிடுவதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post தென்ஆப்பிரிக்கா பறந்தது விஜய் படக்குழு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,South Africa ,Chennai ,Venkat Prabhu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...