×

இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானம் அசாம் – அருணாச்சல் இடையே வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியது..!!

அசாம்: ஒன்றிய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக உருவாக்கியிருக்கும் விமான சேவை முதல்முதலாக வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானம் முதல்முறையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களை கொண்டு தான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை கொண்டு இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுமையும் தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானத்தை அசாமின் திப்ரூகர்-அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட் இடையே அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த விமானம் 17 இருக்கைகள் கொண்ட சிறு விமானமாகும். டோர்னியர் விமானங்களை பாதுகாப்பு படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 17 இருக்கைகள் கொண்ட இரண்டு டோர்னியர் 228 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அலையன்ஸ் ஏர் பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்தது. ஏர்லைன்ஸ் தனது முதல் டோர்னியர் 228 விமானத்தை ஏப்ரல் 7 அன்று பெற்றது. திப்ருகர்-பாசிகாட்-லிலாபரி-திப்ருகர் வழித்தடத்தில் ஏப்ரல் 18ம் தேதி முதல் வழக்கமான விமானச் செயல்பாடுகள் தொடங்கப்பட உள்ளன….

The post இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானம் அசாம் – அருணாச்சல் இடையே வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : India ,Assam ,Arunachal ,Hindustan Aeronautics Agency ,Government of the Union ,Dinakaran ,
× RELATED 400 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறி...