×

பாஜக வேட்பாளரின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்: அசன்சால் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இடைதேர்தல் நடைபெற்று வரும் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசன்சால் மக்களவை தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அதனை பார்வையிட பாஜக வேட்பாளர் அக்னி மித்ரா வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது அவரது வாகனத்தை சிலர் மறிக்க முறிந்து, வாக்குவாதம் செய்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் தடுத்து, அகற்ற முற்பட்டனர். அப்போது கட்டைகள் மற்றும் கற்களை கொண்டு அவர்கள் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வேட்பாளர் அக்னி மித்ரா பால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தம்மை வழிமறித்து தாக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டினார். மேற்குவங்க மாநில காவல்துறையினர் அதனை வேடிக்கைபார்த்ததாகவும் அவர் புகார் கூறினார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி வன்முறைகளை தூண்டிவிட்டாலும், அசன்சால் தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று அக்னி மித்ரா கூறினார்.          …

The post பாஜக வேட்பாளரின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்: அசன்சால் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,western state of Madhya constituency ,Assassal ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல...