×

கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை  : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (12.04.2022) சென்னை வில்லிவாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள சிங்காரவேலன் பள்ளி அருகாமையில் கொளத்தூரில் அமையவிருக்கும் சர்வதேச தரத்திலான வண்ணமீன் வர்த்தக மையத்திற்கான இடத்தை மாண்புமிகு மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து மாண்புமிகு மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கான இடத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இப்பகுதியில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்பட்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் சில்லரை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக இருக்கும். அகத்தீஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை தேர்வு செய்வது குறித்து மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு செய்யப்படும் என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீன் மார்கெட் அமைக்கும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் மீன் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்….

The post கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : International Standard Coloured Fish Trade Centre ,Kolathur ,Minister ,Anita Radhakrishnan ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Sh.R. b.k. ,G.K. ,Stalin ,Chennai Villivakam Prophavam ,
× RELATED கொளத்தூர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம்