×

கண்பத் டிரைலர் வெளியீடு

மும்பை: பூஜா என்டர்டெயின்மென்ட், குட் கோ இணைந்து தயாரித்து இருக்கும் படம், ‘கண்பத்: எ ஹீரோ இஸ் பார்ன்’. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. வரும் 20ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க திரைக்கு வரும் இப்படத்தில் டைகர் ஷெராப், கிரித்தி சனோன், எல்லி அவ்ரம் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. விகாஸ் பால் இயக்கியுள்ள இந்தப் படத்தை வாசு பக்னானி, ஜாக்கி பக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், விகாஸ் பால் தயாரித்துள்ளனர். இந்தியில் ‘கணபத்’ என்ற பெயரில் வெளியாகும் இப்படம், தமிழில் ‘கண்பத்’ என்ற பெயரில் வருகிறது.

The post கண்பத் டிரைலர் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mumbai ,Pooja Entertainment ,Good Co ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...