×

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை;  சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலளாராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி கட்சியின்  பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இருவரின் வழக்குகளையும்  நிராகரிக்க கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை  உச்சநீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று  சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அமமுக என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சியில் பொது செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்த நிலையில், அவரது வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில், சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்றும் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்….

The post சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sasigala ,iCourt ,Chennai District Ownership Court ,Optional General Committee ,Indirect General Committee ,Dinakaran ,
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!