×

அதிவேகமாக வந்த பைக் சாலையோரம் இருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதி பயங்கர விபத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அதிவேகமாக வந்த பைக் திடிரென்று சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதாமல் இருக்க லேசாக திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதியதில் பைக்கில் பின்னாள் அமர்ந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சுபின். இருசக்கர வாகனத்தில் சுபின் மற்றும் அவர் நண்பன் எட்வின் ஜிஜோ-வுடன் நேற்று மாலை கருங்கல் பகுதியில் இருந்து புதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தார் வாகனத்தை சுபின் ஒட்டி வந்த நிலையில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார் அப்போது அவர் மீது மோதாமல் இருக்க சுபின் தனது பைக்கை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் படுகாயமடைந்த எட்வின் ஜிஜோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக வந்தது தான் விபத்துக்கு காரணம் என்று போலீசார் கூறியுள்ளார்….

The post அதிவேகமாக வந்த பைக் சாலையோரம் இருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதி பயங்கர விபத்து appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Pudukkadai, Kannyakumari District ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை