×

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் கடும் சரிவு

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வரத் தொடங்கியுள்ளதால், விலை கடுமையாக சரிந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினசரி 550 வாகனங்கள் வரும். ஆனால் இன்று கூடுதலாக 50 வாகனங்கள் வந்துள்ளன. அதேபோல் தினசரி 5000 டன் காய்கறிகள் வந்தன. இதில் கூடுதலாக 1000 டன் காய்கறிகள் சென்னைக்கு வந்துள்ளன. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறியின் விலை ஒரு கிலோ நாட்டு தாக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று 12க்கும், நவீன தக்காளி ஒரு கிலோ 30 ரூபாயிலிருந்து ரூ.20 க்கும் விற்பனையானது.வெங்காயம் 18 ரூபாயிலிருந்து 14 க்கும், உருளைகிழங்கு 20 ரூபாயிலிருந்து 14க்கும், பீன்ஸ் 50 ரூபாயிலிருந்து 40க்கும், அவரைக்காய்  70 ரூபாயிலிருந்து 60க்கும், சின்னவெங்காயம் 30 ரூபாயிலிருந்து 20க்கும், கத்திரிக்காய் 30 ரூபாயிலிருந்து 20க்கும், சவ்சவ் 20 ரூபாயிலிருந்து 18க்கும், முட்டைக்கோஸ் எட்டு ரூபாயிலிருந்து 15 ரூபாயிலிருந்து 10க்கும், சேனைக்கிழங்கு 18 ரூபாயிலிருந்து 15க்கும், பாவக்காய் 30 ரூபாவிருந்து 20க்கும், புடலங்காய் 40 ரூபாயிலிருந்து 30க்கும், முருங்கை 20 ரூபாயிலிருந்து 15க்கும், சேமகிழங்கு 45 ரூபாயிலிருந்து 35க்கும், பட்டாணி 70 ரூபாயிலிருந்து 60க்கும், எலுமிச்சை 150 ரூபாயிலிருந்து 110க்கும், கோவைக்காய் 30 ரூபாயிலிருந்து 25க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது: நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. தினமும் 550 வாகனங்கள் வரும்நிலையில் கூடுதலாக 50 வாகனங்கள் வந்துள்ளன அதேபோல் 5000 டன் காய்கறிகள் வரும் நிலையில் கூடுதலாக ஆயிரம் டன் என 6,000 டன் காய்கறிகள் குவிந்தன. மேலும் கோடை காலங்கள் என்பதால் காய்கறி விலைகள் இரண்டு நாட்களுக்கு பிறகு ஏற்ற தாழ்வும் இறங்குமும் தவிர காய்கறிகள் கூடுதல் விலைக்கு இருக்காது என தெரிவித்தார்….

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Coimbade market ,Chennai ,Tamil Nadu ,Karnataka ,Maharashtra ,Andhra Pradesh ,Coimbude Market ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...