×

திருவள்ளூர், மயிலாடுதுறையில் 35 நெல் சேமிப்புத் தளங்கள் உணவு தானியங்களை சேமிக்க 12 வட்ட செயல்முறை கிடங்குகள்: அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்  பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதத்துக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்த பின்பு புதிய  அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: ரேஷனில் ஒரு  குடும்பத்துக்கு 2 கிலோ கேழ்வரகு, அரிசி.சிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் நீலகிரி,் தருமபுரி மாவட்டங்களில்  செயல்படுத்தப்படும். சிவகங்கை, அரியலூர், வேலூர், திண்டுக்கல்,  திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில்  தேவைக்கேற்றவாறு 1000 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் கொள்ளவில்  மொத்தம் ரூ.54 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் உணவு தானியங்கள்  சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறைக் கிடங்குகள் கட்டப்படும். எனவே, தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளிடமிருந்து நெல்லினை  கொள்முதல் செய்து வருகிறது. இதை இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாத்திட  மொத்தம் 35000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை  அமைப்புடன் கூடிய 35 நெல் சேமிப்புத் தளங்களை திருவள்ளூர் மற்றும்  மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் ் அமைக்கப்படும்….

The post திருவள்ளூர், மயிலாடுதுறையில் 35 நெல் சேமிப்புத் தளங்கள் உணவு தானியங்களை சேமிக்க 12 வட்ட செயல்முறை கிடங்குகள்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Mayiladudeur ,Minister ,Chakarapani ,Food and Consumer Protection Department ,Tamil Nadu Law Council ,Mayiladuru ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி