×

பூவலம்பேடு ஊராட்சியில் இரும்பு உருக்காலை அமைக்க எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு, பெரிய புலியூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஏற்கனவே இரண்டு இரும்பு உருக்கு ஆலைகள் உள்ளன. இதனால் நிலத்தடிநீர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், பூவலம்பேடு ஊராட்சி அமிர்தமங்கலம் பகுதியில் புதிதாக இரும்பு உருக்காலை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பெரியபுலியூர் ஊராட்சியில் இதே நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாட்டர் பிளாண்ட் தொடங்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. பின்பு ஓரிரு ஆண்டுகள் பின்பு இரும்பு உருக்காலையாக மாற்றி சுற்றுப்புற இடத்தில் கரும்புகை வெளியேற்றி மாசடைந்து. இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப்போக்கு, கேன்சர், தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் அவதிப்படுகின்றனர். இது சம்பந்தமாக பல கட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றது. ஆனாலும் இதுவரை தீர்வுகிடைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் இரும்பு உருக்காலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கருத்துகளை பதிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது….

The post பூவலம்பேடு ஊராட்சியில் இரும்பு உருக்காலை அமைக்க எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Poolampe ,Pavavadi ,Gummhipundi ,Gummypundi ,Great Puliur ,Poolampade ,Dinakaran ,
× RELATED ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்