×

கொலை மிரட்டல் எதிரொலி ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படம் திரைக்கு வந்தது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு நடித்திருந்தனர். கோலிவுட் இயக்குனர் அட்லீ எழுதி இயக்க, அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோருடன் சிறப்பு வேடம்ஒன்றில் சல்மான்கான் நடித்து வெளியான ‘பதான்’ என்ற பான் இந்தியா படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனையைப் படைத்திருந்தது.

இவ்விரு படங்களின் மாபெரும் வெற்றியும், வசூலும் பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே, நாள்தோறும் ஷாருக்கானுக்கு பல தரப்பில் இருந்து மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதாக மகாராஷ்டிரா அரசுக்கு ஷாருக்கான் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கும்படி மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இனி அவருடன் ஆயுதம் ஏந்திய 6 பாது காப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் கூடவே இருப்பார்கள். தவிர, அவரது வீட்டைச்சுற்றிலும் ஆயுதம் ஏந்திய 4 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று மகாராஷ்டிரா போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சல்மான்கானுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிவசேனா கட்சியின் மிரட்டலை தொடர்ந்து கங்கனா ரனவத்துக்கும் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post கொலை மிரட்டல் எதிரொலி ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Y Plus ,Shah Rukh Khan ,Mumbai ,Shahrukh Khan ,Nayanthara ,Vijay Sethupathi ,Deepika Padukone ,Priyamani ,Yogi Babu ,Kollywood ,Atlee ,Anirudh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்...