×

பாய்ஸ், ஆய்த எழுத்து படங்களில் பாடிய பாடகருக்கு கொலை மிரட்டல்: பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது புகார்

பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி மற்றும் அவரது கணவர் மூலம் பெங்களூரு நில மாபியா கும்பல் தன்னைக் கொல்ல முயன்றதாக பாடகர் லக்கி அலி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாலிவுட் சினிமா பாடகர் லக்கி அலி. இவர் புகழ்பெற்ற பாலிவுட் காமெடியன் மெஹ்மூத்தின் மகன். தமிழில் ‘பாய்ஸ்’ படத்தில் ‘சாரிகமே’, ‘ஆய்த எழுத்து’ படத்தில் ‘ஹேய் குட்பாய் நண்பா’ பாடல்களை பாடியுள்ளார். லக்கி அலி வெளியிட்ட பதிவில், ‘பெங்களூரு அடுத்த கெஞ்சனஹள்ளி யெலஹங்கா அருகே எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை நில மாபியா கும்பலை சேர்ந்த சுதிர் ரெட்டி என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்.

இவர், ஐஏஎஸ் அதிகாரியான ரோகிணி சிந்துரியின் கணவராவார். அதிகாரமிக்க தனது மனைவியின் உதவியுடன், எனது பண்ணை நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனது சட்ட ஆலோசகரிடம், உரிய ஆவணங்களைக் காட்ட மறுக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக எனது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் அவர்களிடம் எவ்வித நீதிமன்ற உத்தரவும் இல்லை. என் மீது தாக்குதல் நடத்துவதற்காக உள்ளூர் ரவுடிகளை கூலிப்படைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் எனக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் தருகின்றனர். எனக்கு எதிராக கொலை மிரட்டல்களும் வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார். லக்கி அலியின் இந்த பதிவு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாய்ஸ், ஆய்த எழுத்து படங்களில் பாடிய பாடகருக்கு கொலை மிரட்டல்: பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jhob ,IAS ,Lucky Ali Shamshu ,Rohini Sinduri ,Bollywood ,Lucky Ali ,Karnataka ,Boyz ,Aaydha Jheba ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி...