×

மண்டபம் மார்க்கெட்டில் 20 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ராமநாதபுரம் : மண்டபம் மார்க்கெட்டில் 20 கிலோ அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு, மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலில் பிடிபடும் மீன்கள் விரைவில் கெடாமல் இருக்க, பார்மலின் ரசாயனத்தில் மீன்களை மூழ்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பார்மலின் கலவையில் மூழ்கி எடுக்கப்படும் மீன்கள், 15 நாள் வரை கெடாமல் இருக்கும். ரசாயனம் கலந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகம், கண், நரம்புகள் பாதித்து, புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.மண்டபம் தென், வடக்கு கடலில் பிடிபடும் சீலா, மாவூலா உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களை வெளியூர் வியாபாரிகள் மண்டபம் மீன் மார்க்கெட்டில் வாங்கும் மீன்கள் கெடாமலிருக்க ஐஸ் வைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில் மண்டபம், உச்சிப்புளி மார்க்கெட்களில் நாள்பட்ட மீன்கள் பதப்படுத்தி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தல்படி, உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் நாசர் ஜெயிலானி, உச்சிப்புளி கடல் வள சார்பு ஆய்வாளர் ரகுபதி, கடல் வள மேற்பார்வையாளர்கள் முருகானந்தம், சர்புதீன், சீனிவாசன் உள்ளிட்டோர் மண்டபம், உச்சிப்புளி மீன் மார்க்கெட்களில் நேற்று சோதனை நடத்தினர்.மீன்களில் ரசாயனம் சேர்க்கப்படுகிறதா? நாள்பட்ட மீன்கள் பதப்படுத்தி அனுப்பப்படுகிறதா? என மீன் கடைகள், மொத்த வியாபாரிகளிடமிருந்த மீன்களை சோதனை செய்தனர். மண்டபம் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்த 20 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் கூறுகையில், மண்டபத்தில் 14, உச்சிப்புளியில் 12 வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களின் உயிர்ப்பு தன்மை குறித்து ஆய்வு செய்தோம். மண்டபத்தில் ஒரு வியாபாரியிடம் 20 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அழித்தோம். மீன்களில் பார்மலின் ரசாயனம் கலவை சேர்ப்பில்லை என்றார்….

The post மண்டபம் மார்க்கெட்டில் 20 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mandapam market ,Ramanathapuram ,Food Safety and Fisheries Department ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...