×

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 45 அடியாக சரிவு:மணல் திட்டுக்கள் தெரிகிறது

உடுமலை : பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக உள்ளது திருமூர்த்தி அணையாகும். தொகுப்பணைகளிலிருந்து பெறப்படும் நீர் திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது.மேலும் உடுமலை நகராட்சி, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்பகுதிகள், மடத்துக்குளம் தாலுகா என ஏராளமான பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திருமூர்த்தி அணை உள்ளது. நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை திருப்திகரமாக இருந்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.தற்போது அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள 60 அடியில் 45.91 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 832 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அத்துடன் பாசனத்துக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் அணையிலிருந்து வினாடிக்கு 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர்ப்பரப்பு   ஆங்காங்கே மணல் திட்டுகளாகக் காட்சியளிக்கிறது….

The post திருமூர்த்தி அணை நீர்மட்டம் 45 அடியாக சரிவு:மணல் திட்டுக்கள் தெரிகிறது appeared first on Dinakaran.

Tags : Thirumurthi dam ,Tirumurthi Dam ,Thirumurti Dam ,
× RELATED மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு...