×

கர்நாடகாவில் ஏ.சி. வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி: போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஏ.சி. வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாயினர். கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மரியமானஹள்ளி என்ற பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெங்கட் பிரஷாந்த் என்பவர் அவருடைய மனைவி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் அவரது வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது, திடீரென ஏ.சி.யானது மிகுந்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் சார்ட் சர்கியூட் நிகழ்வும் நடைபெற்றது. இதன் காரணமாக வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீடு முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்தது. இந்த புகை மூட்டத்தால் வெங்கட் பிரஷாந்த், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் மூச்சுத்திணறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதேநேரம், இத்தீயானது அவர்களது உடலில் பற்றிக்கொண்டதால், 4 பேரும் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே அவர்களது உறவினர்கள் வீட்டின் வாயிலில் படுத்துக் கொண்டிருந்த நிலையில், சத்தம் கேட்டதால் அலறி அடித்துக்கொண்டு வெளியே உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்த நிலையில், சிக்கியவர்களை மீட்க சென்றபோது, அவர்கள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு விஜயநகர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அணுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்தானது ஏ.சி.யில் இருந்து ஏதும் விஷவாயு கசிந்ததா? மின்கசிவினால் ஏற்பட்டதா? அல்லது புகைமூட்டதால் மூச்சுதிணறி உயிரிழந்தனரா? என்பது குறித்த முடிவு பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தில் ஏ.சி. வெடித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.            …

The post கர்நாடகாவில் ஏ.சி. வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Karnataka State ,Vijayanagaram ,District ,Dinakaran ,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!