×

இயக்குனர் ஜெயதேவி மரணம்

சென்னை: நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜெயதேவி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவி. முதலில் நடனக்கலைஞராகப் பணிபுரிந்த ஜெயதேவி (65), பிறகு தமிழில் ‘இதய மலர்’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘வாழ நினைத்தால் வாழலாம்’, ‘சரியான ஜோடி’ உள்பட பல படங்களில் நடித்தார். பிறகு ‘மற்றவை நேரில்’, ‘வா இந்த பக்கம்’, ‘நன்றி மீண்டும் வருக’, ‘ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘வா இந்த பக்கம்’ படத்தில் பி.சி.ராமை உதவி ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். பிறகு ‘நலம் நலமறிய ஆவல்’, ‘விலாங்கு மீன்’, ‘விலங்கு’, ‘பாசம் ஒரு வேஷம்’, ‘பவர் ஆஃப் உமன்’ ஆகிய படங்களை எழுதி இயக்கினார். திராவிடர் கழகத்துடன் இணைந்து ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ ஆகிய படங்களை வேலு பிரபாகரன் இயக்கத்தில் தயாரித்தார். பல வருடங்களுக்கு முன்பு வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்த ெஜயதேவி, கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.

தனது அண்ணன் ராமகிருஷ்ணனின் மகனும், இயக்குனருமான முத்துக்குமாரை வளர்த்து வந்த ெஜயதேவி, இதய கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சென்னை போரூர் சமயபுரத்திலுள்ள வீட்டில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இன்று அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. ெஜயதேவியின் மறைவுச்செய்தி அறிந்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

The post இயக்குனர் ஜெயதேவி மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayadevi ,Chennai ,Velu Prabhakaran ,Chindatu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...