×

இறைவன் படத்திலிருந்து 13 நிமிட காட்சிகள் நீக்கம்

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் படத்திலிருந்து 13 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் படம் 2 மணிநேரம் 33 நிமிடம் ஓடுவதாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் பாரத்த ரசிகர்கள் படம் பற்றி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் படத்தின் நீளம் பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இது தொடர்பான கருத்துகளை தொடர்ந்து, படத்தில் 13 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் இப்போது படம் 2 மணிநேரம் 16 நிமிடம் மட்டும் ஓடும் விதமாக குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

The post இறைவன் படத்திலிருந்து 13 நிமிட காட்சிகள் நீக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Jayam Ravi ,Nayanthara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!