×

அஜர்பைஜான் சென்றார் அஜித்: நாளை முதல் 40 நாள் ஷூட்டிங்

சென்னை: அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நாளை முதல் தொடங்குகிறது. துணிவு படத்துக்கு பிறகு லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை இயக்குவது தொடர்பாக விக்னேஷ் சிவனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. சில காரணங்களால் அவர் இயக்கவில்லை. இதையடுத்து மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்ததால், இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் மகிழ் திருமேனி, கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டார்.

முழு ஸ்கிரிப்ட்டும் தயாரான நிலையில் இந்த படத்துக்கு விடா முயற்சி என்ற தலைப்பு வைக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்குவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் இப்படத்துக்காக அஜித் நேற்று அஜர்பைஜானுக்கு புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து படக்குழுவினரும் அங்கு சென்றுள்ளனர். நாளை முதல் விடா முயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டிலுள்ள பல நகரங்களில் நடத்தப்படுகிறது. 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்திவிட்டு நாடு திரும்ப படக்குழு முடிவு செய்துள்ளது.

The post அஜர்பைஜான் சென்றார் அஜித்: நாளை முதல் 40 நாள் ஷூட்டிங் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Azerbaijan ,CHENNAI ,Thadvu ,Lyca ,Vignesh Sivan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்