×

ஷாருக்கான், தீபிகா படுகோனை பின்னுக்கு தள்ளினார்: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.3 கோடி சம்பாதிக்கும் பிரியங்கா

மும்பை: இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.3 கோடி வரை நடிகை பிரியங்கா சோப்ரா சம்பாதிக்கும் நிலையில், அவரைவிட ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றோர் குறைவாகத் தான் சம்பாதிக்கின்றனர். சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் வீடியோக்களை போட்டு பலரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து, அவர்களுக்கான பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயம் செய்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் பெரும் தொகையை சம்பாதிக்கின்றனர்.

குறிப்பாக சினிமா பிரபலங்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி, தங்களது அப்டேட்களை வெளியிடுவது மட்டுமின்றி கோடிக்கணக்கில் பணமும் பார்க்கின்றனர். ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் போட்டால் போதும், அதனை பல லட்சம் பேர் பார்க்கின்றனர். அதற்குள் ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன. அதன் மூலம் அந்த பிரலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் போகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகளில் முதலிடத்தில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா உள்ளார்.

அவரை 89.4 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர். அதனால் ஒரு பதிவை போட்டால் போதும் அவருக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கிறது. ‘சியாசட் டெய்லி’ வெளியிட்ட அறிக்கையில், ‘இன்ஸ்டாகிராமில் 89.4 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட பிரியங்கா சோப்ரா, ஒரு பதிவுக்காக ரூ.3 கோடி அவருக்கு கிடைக்கிறது. மற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி, நடிகை அலியா பட் ரூ. 1 கோடி, ஷ்ரத்தா கபூர் ரூ. 1.18 கோடி, தீபிகா படுகோன் ரூ.1.5 கோடி வரை சம்பாதிக்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஷாருக்கான், தீபிகா படுகோனை பின்னுக்கு தள்ளினார்: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.3 கோடி சம்பாதிக்கும் பிரியங்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shah Rukh Khan ,Deepika Padukone ,Priyanka ,Instagram ,Mumbai ,Priyanka Chopra ,YouTube ,Facebook ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்...