×

குண்டாற்றில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது கரைகள் அமைக்கும் பணி தரமில்லை-பொதுமக்கள் குற்றச்சாட்டு

காரியாபட்டி : காரியாபட்டி அருகே குண்டாற்றில் அதிமுக ஆட்சியில் தொடங்கிய தடுப்பணை கட்டும் பணியில் கரைகள் அமைக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு, மாந்தோப்பு, பிசிண்டி, அச்சங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் காட்டு மழை தண்ணீர் குண்டாற்றின் வழியாக கடலுக்கு சென்று விடும். இந்நிலையில் அப்பகுதியில் விவசாயத்திற்கு மழை தண்ணீர் பயன்படும் வகையில் கல்குறிச்சி குண்டாற்று நடுவில் பந்தனேந்தல் கிராம கண்மாய்க்கு நீர் வழங்க தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்தனர். இது குறித்து அப்போது திருச்சுழி எம்எல்ஏ.வாக இருந்த அமைச்சர் தங்கம்தென்னரசு சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து அதிமுக அரசு ரூ.10 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கியது. புதிய அணைக்கட்டு அமைக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் தரமில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் நடந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மக்கள் கூறுகையில், தற்போது ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையில் குண்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கரைகள் முழுவதும் கரைந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியது. எனவே தடுப்பணையில் இருந்து தோணுகால், தண்டியனேந்தல், பிசிண்டி வரை ஆற்றின் இருபுறமும் கரைகளை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 10 மீட்டர் அகலப்படுத்தி பலப்படுத்துவோம் என அனுமதி வாங்கிவிட்டு 3 மீட்டர் அளவுக்கு கரையில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தடுப்பணையில் சேமித்து வைக்கும் தண்ணீரால் கரைகள் கரைந்துவிடும் சூழ்நிலையும் உள்ளது. கரை உடைந்தால் அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் அபாயம் இருக்கிறது. எனவே முறையாக கரையை பலப்படுத்தி அகலப்படுத்தும் வேலையை செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குண்டாற்றில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது கரைகள் அமைக்கும் பணி தரமில்லை-பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Guntaat ,Kariyapati ,Kundat ,Dinakaraan ,
× RELATED விருதுநகர் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கு: 3 பேர் கைது