×

டி.எஸ்.ராகவேந்திரா குறித்து ஒரு ரீவைண்டு

பன்முக நடிகர், இசை அமைப்பாளர், பாடகர் என்று ரசிகர்களால் அறியப்பட்டவர், டி.எஸ்.ராகவேந்திரா. அவரது இயற்பெயர், விஜயரமணி. இப்பெயருடன் ஆரம்பகாலத்தில் பாடகராக வலம் வந்த அவர், பிறகு நடிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘சிந்து பைரவி’ படம் உருவானது. அப்போது நல்ல இசைஞானம் கொண்ட ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்த்த கே.பாலசந்தர், முன்னதாக ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், பிரமீளா ஜோஷி நடித்து திரைக்கு வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், ரேவதியின் தந்தையாக நடித்திருந்த டி.எஸ்.ராகவேந்திராவை ஓ.கே செய்தார்.

இதில் இசைஞானம் கொண்ட நீதிபதி கேரக்டரில் அவர் நடித்தார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த அவர், முன்னதாக இளையராஜா உள்பட பல இசை அமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ள அவர், இசை அமைப்பாளராகவும் தன்னை திறம்பட வெளிப்படுத்தினார். ‘நினைவில் ஒரு மலர்’, ‘யாகசாலை’, ‘தேன் சிட்டுகள்’, ‘உயிர்’, ‘படிக்காத பாடம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

சுலோசனா என்ற பாடகியை காதல் திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர், கல்பனா ராகவேந்திரா. குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்த அவர், பிறகு நிறைய நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். தற்போது முழுநேர பாடகியாக வலம் வருகிறார்.

The post டி.எஸ்.ராகவேந்திரா குறித்து ஒரு ரீவைண்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : DS ,Raghavendra ,Vijayaramani ,Sindhu Bhairavi ,K. Balachandar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி...