×

ஐமா -திரைப்பட விமர்சனம்

தனது தாயின் உடல்நிலை பாதித்ததால், அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் யூனஸ். அதே மருத்துவமனையில், ஒரு விபத்தில் சிக்கிய எல்வின் ஜூலியட் அனுமதிக்கப்படுகிறார். திடீரென்று அவர்களைக் கடத்தி ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அவர்களின் கை, கால்கள் கட்டப்படுகின்றன. அவர்களைக் கடத்திய மர்ம நபர், தனது ரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, இருவரையும் நீண்ட நேரம் சித்ரவதை செய்கிறான். அவர்களைக் கடத்திய நபர் யார்? எதற்காக இப்படிச் செய்தார்.

என்பது மீதி கதை. ஆரம்பகால விஜய்யைக் காப்பியடித்து நடித்திருக்கிறார், யூனஸ். தனியறையில் மாட்டிக்கொண்டு தவிப்பதை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். எல்வின் ஜூலியட் அழகாக இருக்கிறார். ஹீரோவுக்கு லிப்லாக் கொடுத்துவிட்டு வெட்கப்படுகிறார். மர்ம நபராக வரும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி, அதிகமாகப் பேசி வில்லத்தனம் செய்துள்ளார். வெவ்வேறு கெட்டப்புகளில் வந்து, தன் நடிப்பு ஆசையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார். ‘ஐமா’ என்றால், கடவுள் சக்தி என்று அர்த்தமாம்.

முதலில் பேய் படம் போல் தோற்றம் அளித்து, இறுதியில் வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லராக முடிகிறது. மருத்துவ ஆராய்ச்சி என்று சொல்லி, என்னென்னவோ பேசி படத்தை இழுத்திருக்கிறார்கள். ஒரே அறையில் கேமரா கோணங்களை மாற்றி, சபாஷ் சொல்ல வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன். கே.ஆர்.ராகுல் இசையில் 10 பாடல்கள். பின்னணி இசை பரவாயில்லை. ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் கதை என்பதால், திரைக்கதையில் விறுவிறுப்பை இன்னும் அதிகரித்து இருக்கலாம்.

The post ஐமா -திரைப்பட விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yunus ,Elvin Juliet ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்