×

தி.மலை.யில் ஆசிரமம் தொடங்குகிறார் சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரணி!: பூமி பூஜை போட்டாச்சு..!!

திருவண்ணாமலை: சமூக வலைத்தளங்களில் பிரபலமான பெண் சாமியார் அன்னபூரணி அரசு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க பூமி பூஜை நடத்தியுள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த அன்னபூரணி என்பவர் புத்தாண்டு தினத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் ஆசி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தார். அந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது மற்றொரு பெண்ணின் கணவரை அபகரித்ததாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அன்னபூரணி தோன்றியிருந்த வீடியோக்களும் வெளியானது. அரசு என்ற அந்த நபர் இறந்தவுடன், அவருக்கு சிலை வைத்து வழிபட்டதுடன், அன்னபூரணி அரசு அம்மா என தன்னை அழைத்துக்கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கினார். நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறவில்லை என போலீஸ் வரை பிரச்சனை சென்றதால் சில காலம் ஆன்லைனில் தோன்றி அன்னபூரணி பேசி வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பில் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கியுள்ள அவர், அதற்கு பூமி பூஜையும் நடத்தியுள்ளார். பொதுமக்களுக்கு ஆன்மிகம் கற்பித்து முக்தி அடைய பயிற்சி வழங்குவதாக கூறி இந்த ஆசிரமத்தை அவர் தொடங்கவுள்ளார். …

The post தி.மலை.யில் ஆசிரமம் தொடங்குகிறார் சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரணி!: பூமி பூஜை போட்டாச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Annapoorani ,T.Malai ,Thiruvannamalai ,Bhumi Puja ,Tiruvannamalai district ,
× RELATED மண்ணாங்கட்டியை முடித்தார் நயன்தாரா