×

முழு ஊரடங்கு எதிரொலி; இலங்கையில் முக்கிய மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூட அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு.!

கொழும்பு: இலங்கையில் வடக்கு,தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூடுமாறு அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, இலங்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் வடக்கு,தெற்கு,வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூடுமாறு அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிற மாகாணங்களில் பருவத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மட்டும் அந்தந்த பள்ளிக்கல்விப் பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post முழு ஊரடங்கு எதிரொலி; இலங்கையில் முக்கிய மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூட அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு.! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ministry of Education ,Colombo ,North ,South ,North-West ,Eastern Provinces ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...