×

10 ரயில்கள் கால அட்டவணையில் மாற்றம்; நாகர்கோவில் வரும் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே தகவல்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 22627 திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி தினசரி எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து ஏப்ரல் 3ம் தேதி முதல் புறப்படுவது நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நேரத்தின்படி திருச்சியில் இருந்து காலை 7.20க்கு புறப்பட்டு மணப்பாறை 7.45க்கு வந்து 7.46க்கு புறப்படும். திண்டுக்கலுக்கு 8.22க்கு வந்து 8.25க்கும், மதுரைக்கு 9.15க்கு வந்து 9.20க்கும், விருதுநகருக்கு 10.08க்கு வந்து 10.10க்கும், சாத்தூருக்கு 10.28க்கு வந்து 10.30க்கும், கோவில்பட்டிக்கு 10.48க்கு வந்து 10.50க்கும் புறப்படும்.ரயில் எண் 22657 தாம்பரம் -நாகர்கோவில் ஜங்ஷன் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 11ம் தேதி புறப்படுவது வள்ளியூர்-நாகர்கோவில் இடையே 25 நிமிடங்கள் வேகம் அதிகரிப்பட்டு இயக்கப்படும். வள்ளியூருக்கு காலை 06.01க்கு வந்துவிட்டு 6.02க்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு காலை 7 மணிக்கு வந்து சேரும். ரயில் எண் 16723 சென்னை எழும்பூர்-கொல்லம் ஜங்ஷன் அனந்தபுரி தினசரி எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி புடுறப்படுவது கொல்லம் -திருநெல்வேலி இடையே 45 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்படுகிறது. திருநெல்வேலிக்கு காலை 6.45க்கு வந்து 6.50க்கு புறப்படும். நாங்குநேரிக்கு காலை 7.17க்கு வந்து 7.18க்கும், வள்ளியூருக்கு காலை 7.28க்கு வந்து 7.29க்கும், ஆரல்வாய்மொழிக்கு 7.47க்கு வந்து 7.48க்கும், நாகர்கோவிலுக்கு காலை 9க்கு வந்து 9.05க்கும், இரணியலுக்கு காலை 9.24க்கு வந்து 9.25க்கும், குழித்துறைக்கு காலை 9.40க்கு வந்து 9.43க்கும், பாறசாலைக்கு 9.53க்கு வந்து 9.54க்கும், நெய்யாற்றின்கரை 10.6க்கு வந்து 10.7க்கும், திருவனந்தபுரம் காலை 10.35க்கு வந்து 10.40க்கும், வர்க்கலை சிவகிரி 11.18க்கு வந்து 11.19க்கும், பரவூருக்கு காலை 11.30க்கு வந்து 11.31க்கும், கொல்லத்திற்கு பகல் 12.10க்கும் சென்று சேரும். ரயில் எண் 16128 குருவாயூர்-சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் குருவாயூரில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி முதல் புறப்படுவது குருவாயூர் முதல் நாங்குநேரி இடையே நேரம் மாற்றம் செய்யப்பட்டு வேகம் 10 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் குருவாயூரில் இருந்து இரவு இரவு 11.20க்கு புறப்பட்டு, எர்ணாகுளத்திற்கு அதிகாலை 1.15க்கு வந்து சேரும். கொல்லத்திற்கு அதிகாலை 3.42க்கும், திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு காலை 5.15க்கும், குழித்துறைக்கு காலை 6.08க்கு வந்து காலை 6.10க்கும், இரணியலுக்கு காலை 6.29க்கு வந்து காலை 6.30க்கும், நாகர்கோவிலுக்கு காலை 7.55க்கு வந்து 8க்கும், வள்ளியூருககு காலை 8.34க்கு வந்து காலை 8.35க்கும், நாங்குநேரிக்கு காலை 8.45க்கு வந்து 8.46க்கும் புறப்படும். ரயில் எண் 12667 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ஜங்ஷன் வாராந்திர எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 14 முதல் புறப்படுவது வேகம் அதிகரிக்கப்பட்டு நாகர்கோவில் சந்திப்புக்கு 25 நிமிடங்கள் முன்னதாக காலை 7 மணிக்கு வந்து சேரும். ரயில் எண் 17235 கேஎஸ்ஆர் பெங்களூரு -நாகர்கோவில் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி முதல் புறப்படுவது வேகம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு வள்ளியூர்-நாகர்கோவில் ஜங்ஷன் இடையே இயக்கப்படும். அதன்படி வள்ளியூருக்கு காலை 6.24க்கு வந்து 6.25க்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு காலை 7.40க்கு வந்தடையும். ரயில் எண் 16321 நாகர்கோவில் ஜங்ஷன்-கோயம்புத்தூர் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படுவது ஏப்ரல் 14 முதல் திருநெல்வேலி சந்திப்பு வரை நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 40 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 7.05க்கு புறப்பட்டு வள்ளியூருக்கு காலை 7.42க்கு வந்து காலை 7.43க்கு புறப்படும். நாங்குநேரிக்கு காலை 7.53க்கு வந்து காலை 7.54க்கு புறப்படும். செங்குளத்திற்கு காலை 8.04க்கு வந்து காலை 8.05ககு புறப்படும். திருநெல்வேலிக்கு காலை 8.45க்கு வந்து காலை 8.50க்கு புறப்படும். ரயில் எண் 20923 திருநெல்வேலி ஜங்ஷன்- காந்திநகர் ஹம்சபார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி புறப்படுவது நாகர்கோவில் டவுன் – காயங்குளம் இடையே நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் டவுன் காலை 9.25க்கு வந்து காலை 9.27க்கு புறப்படும். திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு காலை 11க்கு வந்து காலை 11.05க்கு புறப்படும். காயங்குளத்திற்கு காலை 12.48க்கு வந்து காலை 12.50க்கு புறப்படும். ரயில் எண் 16351 மும்பை சிஎஸ்எம்டி -நாகர்கோவில் ஜங்ஷன் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சிஎஸ்எம்டியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி முதல் புறப்படுவது 25 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு வள்ளியூர் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும். வள்ளியூருக்கு காலை 6.01க்கு வந்து 6.2க்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு காலை 7க்கு வந்து சேரும். ரயில் எண் 19577 திருநெல்வேலி ஜங்ஷன் ஜாம்நகர் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஏப்ரல் 18ம் தேதி புறப்படுவது நாகர்கோவில் டவுன்-காயங்குளம் இடையே நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் டவுனுக்கு காலை 9.25க்கு வந்து காலை 9.27க்கு புறப்படும். பாறசாலைக்கு 10.02க்கு வந்து 10.03க்கு புறப்படும். திருவனந்தபுரம் சென்ட்ரக்கு காலை 11க்கு வந்து காலை 11.05க்கு புறப்படும். கொல்லத்திற்கு காலை 12.15க்கு வந்து 12.18க்கு புறப்படும். காயங்குளத்திற்கு 12.48க்கு வந்து 12.50க்கு புறப்படும். ஆலப்புழாவுக்கு மதியம் 1.25க் வந்து 1.27க்கு புறப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post 10 ரயில்கள் கால அட்டவணையில் மாற்றம்; நாகர்கோவில் வரும் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Southern ,Railway ,Nagarko ,Southern Railway ,Thiruvananthapuram ,Trich- ,InterCity Daily Express ,Trichy ,
× RELATED சென்னை சென்ட்ரல், எழும்பூரில்...