×

விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம் நடந்த குடோனுக்கு அழைத்துச் சென்று 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மதுரை சிறையில் இருந்த ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய 4 பேரை, 7 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 2 தினங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  நேற்று காலை ஹரிஹரன், ஜூனத் அகமது இருவரையும், பெத்தனாட்சி நகரில் 20.8.2021 முதல் 18.3.2022 வரை பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ள மெடிக்கல் குடோனுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையில் போலீசார் அழைத்து சென்றனர்.சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள மெடிக்கல் குடோன் மாடியில் மிகப்பெரிய ஹால், இரு அறைகள், பாத் தொட்டியுடன் கூடிய பெரிய குளியல் அறை, சமையல் அறையுடன் கூடிய பெரிய வீடு உள்ளது. குடோன் மாடி வீட்டு கதவு திறந்த நிலையில் உள்ளது. அங்குள்ள அறைகளில் 4 மெத்தைகள், சமையல் பாத்திரங்கள், காலாவதியான மாத்திரைகள், ஊசி மருந்துகள் கொட்டி கிடந்தன. பராமரிப்பு இல்லாத இந்த குடோன் வீட்டில் தான் கூட்டு பாலியல் சம்பவம் நடந்துள்ளது.  இந்த வீட்டில் வைத்து 30 நிமிடம் விசாரணை நடத்திய நிலையில், ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமது இருவரையும் மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்….

The post விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம் நடந்த குடோனுக்கு அழைத்துச் சென்று 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Virudhunagar ,Hariharan (A) Saravanan ,Madasamy ,Praveen ,Junath Ahmed ,
× RELATED நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு