×

ஏடிஎம் மெஷினில் கண்டெடுத்த ரூ.20 ஆயிரம் எஸ்பியிடம் ஒப்படைப்பு: இளம்பெண்ணுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்தவர் பிரியா. கடந்த 28ம் தேதி பிரியா, மேட்டு தெருவில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அங்கு, ஏடிஎம் மெஷினில் ரூ.20 ஆயிரம் இருந்தது. இதை கண்ட அவர், பணத்தை மீட்டு வைத்து கொண்டார். இதைதொடர்ந்து பிரியா, நேற்று காலை காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் சென்றார். அங்கு எஸ்பி சுதாகரை சந்தித்து, அவரிடம் ஏடிஎம் மையத்தில் மீட்ட பணத்தை ஒப்படைத்து, அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஏடிஎம் வங்கி கிளை மேலாளர் திவாகர் மற்றும் பழனி ஆகியோரை தொடர்பு கொண்டு எஸ்பி அலுவலகம் வரவழைத்தனர். அவர்களிடம், பிரியா மூலம் பணத்தை ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கும்படி எஸ்பி கூறினார். ஏடிஎம் மையத்தில் கிடைத்த வேறு ஒருவரின் பணத்துக்கு ஆசைப்படாமல், நேர்மையாக செயல்பட்ட பிரியாவின் செயலை எஸ்பி சுதாகர் பாராட்டினார்….

The post ஏடிஎம் மெஷினில் கண்டெடுத்த ரூ.20 ஆயிரம் எஸ்பியிடம் ஒப்படைப்பு: இளம்பெண்ணுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Priya ,Kanchipuram Pallavan ,Metu Street ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...