×

சென்னை மாநகராட்சி நியமன குழுக்களுக்கான 6 நிலை குழு தலைவர்கள், 2 உறுப்பினர்கள் தேர்வு

சென்னை: சென்னை மாநகராட்சி நியமன குழுகளுக்கான 2 உறுப்பினர்கள், நிலை குழு தலைவர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட தேர்தலில் 200 வார்டுகளில் திமுக 153   இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அதிமுக 15 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட பாஜ, அமமுக தலா ஒரு இடங்களிலும், 5 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ்குமார் கடந்த மாதம் 4ம் தேதி பதவியேற்றனர். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலத்துக்கான தலைவர் மற்றும் ஆறு நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் 30 மற்றும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகராட்சியின் 2 நியமனக் குழு உறுப்பினர்கள் மற்றும் 6 நியமனக்குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. மேயரை தலைவராக கொண்டு செயல்படும் நியமனக்குழுவில் ஆணையர் மற்றும் இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் இருப்பர். இந்த நியமனக் குழு கூட்டம் மாதந்தோறும் மேயர் தலைமையில் ஆணையர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாமன்ற உறுப்பினர்களை கொண்டு நடத்தப்படும். அதன்படி நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், 141 வது  வார்டை சேர்ந்த ராஜா அன்பழகன், 78வது வார்டை சேர்ந்த சோ.வேலு ஆகியோர் நியமனக்குழு உறுப்பினர்களாக திமுக சார்பில் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அதேபோல், 137வது வார்டை சேர்ந்த தனசேகரன் கணக்கு குழுத் தலைவராகவும், 81 வது வார்டை சேர்ந்த சாந்தகுமாரி பொதுசுகாதாரக் குழு தலைவராகவும், 181 வது வார்டை சேர்ந்த விசுவநாதன் கல்விக்குழுத் தலைவராகவும், 44 வது வார்டை சேர்ந்த சர்பஜெயாதாஸ் நரேந்திரன் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவராகவும், 49 வது வார்டை சேர்ந்த இளைய அருணா நகரமைப்பு குழுத்தலைவராகவும், 110 வது வார்டை சேர்ந்த சிற்றரசு பணிகள் குழுத் தலைவராகவும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்….

The post சென்னை மாநகராட்சி நியமன குழுக்களுக்கான 6 நிலை குழு தலைவர்கள், 2 உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Group ,Chennai Corporation Appointment Groups ,Chennai ,Chennai Corporation Nomination Groups ,Chennai Corporation Nomination Committees ,
× RELATED குரூப் 4 தேர்வுகளில் குளறுபடி மறுதேர்வு நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்