×

மூலப்பொருட்களின் விலையேற்றத்திற்கு கண்டனம்; தமிழகத்தில் வரும் ஏப்.6 முதல் 17 வரை தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்

கோவில்பட்டி: மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உட்பட நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை 30% முதல் 40% வரை உயர்த்தப்பட்டிருப்பதால், தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, தீப்பெட்டி உற்பத்தி இருந்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என்பதால், வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த தொழிற்சாலைகள் முடி செய்துள்ளது. 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பந்தலின் விலை ரூ.300-லிருந்து ரூ.350 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சைனாவிலிருந்து வரும் லைட்டரால், தீப்பெட்டி விற்பனை 30% பாதிக்கப்படுவதாகவும், அதற்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என சங்கத்தின் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் அந்த தொழிலை நம்பி உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.          …

The post மூலப்பொருட்களின் விலையேற்றத்திற்கு கண்டனம்; தமிழகத்தில் வரும் ஏப்.6 முதல் 17 வரை தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Govilbati ,Firebox Factories ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...